SrilankanTourism

Sunday, June 25, 2017

தென்னாசியா நோக்கிய ஓர் பார்வை.

தென்னாசியப் பகுதியில் காணப்படும் எட்டு நாடுகளை உள்ளடக்கிய ஓர் அமைப்பே சார்க் அமைப்பாகும்.இந்திய கவசத் தகடு,இந்தோ -அவுஸ்ரேலியத் தகடு,ஐரோ -ஆசியத் தகடு ஆகியவற்றுக்குள் உள்ளடங்கும் 4000 k.m கிழக்கு மேற்காகவும், 3200 k.m வடக்கு தெற்காகவும் காணப்படும் 1656401 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பபை கொண்ட பிரதேசமே தென்னாசியா ஆகும். 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய துணைக்கண்டத்தினுள் உள்ளடங்கி இருந்த இப் பிரதேசத்திற்குள் பிரித்தானிய ஆதிக்கத்தின் பின்னர் சுதந்திர நாடுகளான பங்களாதேஷ்,பாகிஸ்தான், மலைதீவு ஆகியன பரிணமித்தன. இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகள் தரை ரீதியாக தொடர்பற்ற வகையில் தனித் தீவுகளாக காணப்படுகின்றன.

250 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட பஞ்சியாக் கண்டத்தில் இந்தோ -அவுஸ்ரேலியத் தகடு நகர்ந்தமையினால் அத் தீவுகள் பிரிவடைந்தன. தென்னாசியாவின் மனித பரிணாமம் இற்றைக்கு 5 இலட்சம் வருடங்களுக்கு முன் ஹோமோ இரக்டஸ் உடன் வெளிப்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.தொடர்ச்சியாக 75,000 வருடங்களுக்கு முன் ஹோமோ சேப்பியன்ஸ் ஆதாரங்களும் அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பெருங்கற் காலம், பித்தளைக்காலம் என்பவற்றுடன் சிந்துவெளி நாகரிக உருவாக்கத்துடன் இங்கு நகரமயமாக்கமும் ஏற்பட்டது.
          இப் பிரதேசம் புவியியல் ரீதியாக பனிமலைகள், மழைக்காடுகள், அயனக் காடுகள், பாலைவனங்கள்,புல்வெளிகள், இந்துமா சமுத்திரம், அரேபியன் கடல், பல்வேறு நதிகள் என்பவற்றை உள்ளடக்கிய பல் நில உறுப்பு பிரதேசமாகும். இதன் காணரணமாக தென்னாசிய பிரதேசத்தில் பல்வேறு வகைப்பட்ட சுற்றுலாவை மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் உலகின் எல்லா பிரதேச காலநிலைகளையும் இங்கு காணக்கூடிய தன்மை காணப்படுகின்றது.
wikitravel.org>southasia இதனால் இப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவ் தென்னாசிய நாடுகளின் வருமானத்தினை அதிகரிக்கும் ஒரு துறையாக சுற்றலா துறை காணப்படுவது சிறப்பம்சமாகும். இப் பிரதேசங்களில் 200 பரந்த இனக் குழுக்களும் ,1 மில்லியனுக்கு மேற்பட்ட சிறிய அளவினால் ஆன இனக் குழுக்களும் வாழ்ந்து வருகின்றனர். திராவிடர், ஆரியர், இந்தோ ஈரானியர், ஒஸ்ரிக் ஆகிய இனக் குழுக்கள் பரவலாக காணப்படுகின்றன. மொழி ரீதியாக நோக்கின் 422 மில்லியன் மக்களால் ஹிந்தி மொழியும் 210 மில்லியன் மக்களால் பெங்காளி மொழியும் ஏனைய மக்களால் ஆயிரத்துக்கு மேற்பட்ட மொழிகளை பேசும் பண்பாடும் கொண்ட பிரதேசமாக இப் பிரதேசம் திகழ்கிறது. பிராந்திய மதமாக இந்து மதம் 63.05 % ஆக காணப்படுவதுடன் ,30.08 % இஸ்லாமிய மதமும் பின்பற்றப் படுகின்றது. உலகின் இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் அதிகமான மக்கள் இப் பிரதேசங்களிலேயே உள்ளனர்.  அதாவது பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிடையிலேயே  2 ம் 3ம் 4ம் இடங்களில் இம் மக்கள் வசித்து வருகின்றனர். 1985  ம் ஆண்டு டிசம்பர் 08 ம் திகதி காத்மண்டு நகரில் ஒன்று கூடிய பிராந்தியத் தலைவர்களால் பிரதேச, கலாசார மரபுரிமை, வர்த்தக உறவுகள், பிராந்திய பாதுகாப்பு போன்ற பல விடையங்களுக்காக இங்கு சார்க் அமைப்பு முதன்முதலில் உருவாக்கப்பட்டமை சிறப்புக்குரிய விடையமாக உள்ளது. 2005 ம் ஆண்டு இறுதியாக ஆப்கானிஸ்தான் நாடும் இச் சார்க் அமைப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து இன்று தென்னாசிய சார்க் அமைப்பில் எட்டு நாடுகள் அங்கத்துவ நாடுகளாக உள்ளன.அவையாவன:
இலங்கை
இந்தியா
பாகிஸ்தான்
பங்களாதேஷ்
பூட்டான்
நேபாளம்
மாலைதீவு
ஆப்கானிஸ்தான் என்பனவாகும்.  southasian.concern.org சார்க் அமைப்பில் தென்னாசிய நாடுகள் பல அங்கத்துவ நாடுகளாக உள்ளதால் சுற்றுலா மற்றும் நாட்டின் அபிருத்தி நடவடிக்கைகள், அரசியல் உறவுகள் போன்ற அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் இந் நாடுகளுக்கு சார்க் அமைப்பு பல உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். தற்பொழுது உக்கிரைன், சீனா, பர்மா, ரஷ்யா முதலிய நாடுகள் தாமும் அப் பலன்களை அடைவதற்காக இச் சார்க் அமைப்பில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எனவே தொகுத்து நோக்குமிடத்து ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போதும் ஏனைய கண்டங்களுடன் ஒப்பிடும் பொழுதும் ஆசியாக் கண்டத்தில் உள்ள நாடுகளுள் தென்னாசிய நாடுகள் தனிப்பட்ட பண்பாடு, கலாசாரம், மொழி, சமயம், கலை, அரசியல் பொருளாதார நடவடிக்கைகள், வாழ்வியல் முறைகள் என்பவற்றில் ஏனைய நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தனித்தன்மையுடன் காணப்படுவதினால் இங்கு சுற்றுலாத் துறையும் ஏனைய துறைகளும் நன்கு வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.

Reference -

www.library.Illinois.edu>sa_countries
southasian.concern.org
www.worlddatlas.com
wikitravel.org>southasia
https://ta.m.Wikipedia.org>wiki>southasia
https://en.m.Wikipedia.org.>wiki>cotegory
https://en.m.Wikipedia.org>wiki>southasia

தொகுப்பு  செ.சுபானி.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
மூன்றாம் வருடம் தொல்லியல் துறை.

6 comments:

  1. நல்ல கட்டுரை
    உங்களிடம் "தெற்காசியாவின் பிராந்தியப் பாதுகாப்பு" சம்பந்தமா ஏதேனும் கட்டுரை இருந்தால் எனக்கு அனுப்புங்கள்
    zamharsharif@gmail.com

    ReplyDelete
  2. சிறந்த தகவல்கள்.
    தென்னாசியாவில் இருமாெழியம் பன்மாெழியம் பற்றிய தகவல்கள் இருந்தால் பகிருங்கள்

    ReplyDelete
  3. Replies
    1. தென்னாசிய பண்பாடு தென்னாசியாவுக்கு அப்பால் பரவியமைக்கான புவியியல் பௌதீக காரணிகள் போடவும்

      Delete
  4. தென்னாசியாவின் காலநிலை வலயங்களும் முக்கியத்துவமும் சம்பந்தமான குறிப்புக்கள் அனுப்பவும்

    ReplyDelete