SrilankanTourism

Thursday, June 22, 2017

இலங்கையில் உள்ள சுற்றுலா சார் நிறுவனங்கள்.

இன்று உலகலாவிய ரீதியில் வளர்ந்து வரும் ஒரு துறையாக சுற்றுலாத் துறை காணப்படுகின்றது.அதிக நாடுகளில் சுற்றலாத் துறை மூலமே வருமானம் கிடைக்கின்றது.
குறைந்த அளவிலான மூலதனத்துடன் சுற்றுலாப் பயணிகளை கவர்வதன் மூலம் நாட்டின் வருமானத்தை வளர்த்துக் கொள்ள முடிகின்றது.

உதாரணமாக மாலைதீவின் மொத்த தேசிய வருமானத்தில் 74% சுற்றுலாத் துறை மூலமே கிடைக்கின்றது. தன்சானியா,கென்யா போன்ற நாடுகள் இயற்கையை மூலதனமாக்கி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அவற்றை அமைத்து தமது வருமானத்தினைப் பெருக்கிக் கொள்கின்றனர்.அபிவிருத்தி அடைந்த நாடுகளை விட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே சுற்றுலாத் துறையை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருமானத்தை ஈட்டுகின்றன.இதன் அடிப்படையில் இலங்கையும் தனது சுற்றுலாத் துறையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இலங்கையில் காணப்படும் சுற்றுலா சார் நிறுவனங்கள் இதற்கான பணியை சரிவரச் செய்கின்றன.அவையாவன:
இலங்கைச் சுற்றுலா அதிகார சபை.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்.
இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம்.
தேசிய மரபுரிமைகள் திணைக்களம்
மத்திய கலாசார நிதியம்
தொல்லியல் திணைக்களம்
இலங்கை கலைக்கழகம்
நகர பிரதேச அபிவிருத்தி மையம்
இலங்கை சுற்றுலா அதிகார சபை
இலங்கை தெற்கு அதிகார சபை
இலங்கை சுற்றுலாப் பயணிகள் சபை
இலங்கை பொதுத் தணிகை சபை
பிராந்திய அபிவிருத்தி நிலையம்
இலங்கை மாநாட்டு பணியகம்
ஊரக வளர்ச்சி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்பவையாகும்.
         இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு இந் நிறுவனங்கள் கணிசமமான பங்கினை ஆற்றுகின்றன. இலங்கை உலக நாடுகளில் சுற்றுலா சார் அம்சங்களில் 13 ம் நிலையில் காணப்படும் ஒரு நாடாகும்.ஆரம்பத்தில் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு பிரதேச சுற்றுலா அமைப்புக்களே பங்களிப்பினை வழங்கியுள்ளது.பின் 1937 ல் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முகமாகவும் அவர்களுக்கான தரமான சேவையினை வழங்குவதற்காகவும் Tourist Bureaw என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கூறப்பட்ட பல சுற்றுலா சார் நிறுவனங்களும் அமைப்புக்களும் அரச மற்றும் தனியார் ஆதரவுடன் தோற்றம் பெற்றது.இவ் நிறுவனங்களின் பணியாக பின்வருவன அமைகின்றன.
            உலக நாடுகளுக்கு இலங்கை பற்றிய தகவல்களை விளம்பரங்களை வழங்குதல், பயணங்களுக்கு ஏற்ற இலகுவான வழிமுறைகளை உருவாக்குதல்,தரமான சேவையை வழங்குவதற்காக பயிற்சிப் பாடசாலைகளை பிரதேச ரீதியாக உருவாக்குதல்,விடுதிகள் போக்குவரத்து வசதிகள் முதலிய சுற்றுலா சார் சேவைகளை ஒழுங்கமைத்தலும் தரநிர்ணயம் செய்தலும்,சுற்றுலா வழிகாட்டிகளை பயிற்றுவித்தல்,கலாசார நிகழ்வுகளினை விளம்பர நோக்கோடு பிற நாடுகளில் நடாத்தல் என்பனவாகும்.
        இவ் வகையில் கலாசார அலுவல்கள் திணைக்களம்www.cultural.gov.lk இலங்கையின் கலாசார சுற்றுலா வளர்ச்சிக்கு பல பணிகளை ஆற்றுகின்றது.இதன் தொலைநோக்கு இலங்கையின் கலாசாரத்தை வளர்த்தல் ஆகும்.இலங்கை அடையாளத்துடன் இலக்கிய கலை மற்றும் கலாசார அலுவல்களை பாதுகாத்தல்,மேம்படுத்தல் மற்றும் பரவலாக்கல் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், மற்றும் நடைமுறைப்படுத்தல் என்பன இதன் தொழிற்பாடுகளாக உள்து.
அடுத்து தொல்லியல் திணைக்களம் இலங்கையின் தொல்லியல் மரபுரிமை தொடர்பான பணிகளுக்காக உருவாக்கப்பட்டது. https://ta.m.Wikipedia.orgஇதன் நோக்கமானது  இலங்கையில் தொல்லியல் மரபுரிமை தொடர்பான சரியான முகாமைத்துவத்தை வளர்ப்பதாகும்.இத் திணைக்களத்தின் பணியானது இந்நாட்டில் தொல்லியல் மரபுரிமையை முகாமைப்படுத்தும் தலைசிறந்த நிறுவனம் என்ற வகையிலும் பிரதான ஒழுங்குமுறைப் படுத்தல் என்ற வகையிலும் செயலாற்றுகின்றது.தொல்லியல் மரபுரிமை தொடர்பில் தேவையான மனித வளங்களையம், நிறுவன வளங்களையும் உருவாக்கிப் பேணுதல், நாடு முழுவதும் உள்ள தொல்லியல் மரபுரிமைகளைப் பாதுகாத்தல்,அவற்றை பதிவு செய்தல்,இது தொடர்பாக மக்களிடையே அறிவை வளர்த்தல்,தொல்லியல் களங்களையும் நினைவுச் சின்னங்களையும் பேணிப் பாதுகாத்தல்,தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபடுதல் என்பன இதன் பணிகளாகும்.
   
          அடுத்து இலங்கை சுற்றுலா அதிகார சபையும் சுற்றுலாவை வளர்க்கும் நிறுவனமாய் உள்ளது.இது இலங்கையின் அண்மைக்கால சுற்றுலாத்துறை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 2012 ம் ஆண்டில் செப்டம்பர் மாத முடிவுடன் 693,772 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் எனவும் இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான தொகையுடன் ஒப்பிடுகையில் 16% அதிகரிப்பு எனவும் சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.சுற்றலா துறை இவ்வாறு வளர்ச்சி அடைந்து வருவதற்கு மேற்கூறப்பட்ட நிறுவனங்களின் பணியே மகத்துவமாகவுள்ளது.இதனை விட மத்திய கலாசார நிதியம் www.ccf.gov.lkமற்றும் ஏனைய நிறவனங்களும்  இலங்கையின் சுற்றுலா வளர்சியில் பங்காற்றுகின்றன.
     எனவே இலங்கைக்கு ஏனைய துறைகளை விட சுற்றுலாத் துறையினாலேயே அதிக வருமானம் கிடைக்கின்றது.கலாசார மற்றும் தொல்லியல் சுற்றுலா வகைகளே இலங்கையில் அதிகம் வளர்ச்சியடைந்துள்ள சுற்றுலா வகைகளாகவுள்ளன.இவற்றின் இவ் அதீத வளர்ச்சிக்கு இலங்கையில் காணப்படுகின்ற சுற்றுலா சார் நிறுவனங்களும் அமைப்புக்களுமே பாரிய பங்களிப்பினை ஆற்றுகின்றன என்றால் அது மிகையாகாது.

Reference -

www.culturalheritageconnections.org
www.list.lk
www.doa.gov.np
www.sjp.ac.ok
www.Moe.gov.lk
www.cultural.gov.lk
www.cc.gov.lk
www.sltda.gov.lk

தொகுப்பு.செ.சுபானி.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.
மூன்றாம் வருடம் தொல்லியல் துறை.

1 comment:

  1. The Lucky Club Casino site | Betting, Casino and Bingo games | Lucky
    The Lucky Club luckyclub casino site provides the latest and greatest online casino games and bonus offers, bonuses, VIP program, sportsbook, casino & poker games.

    ReplyDelete