SrilankanTourism

Wednesday, June 21, 2017

வட இலங்கையின் சுற்றுலாவினை மேம்படுத்தும் யாழ்ப்பாணக் கோட்டை

யாழ்ப்பாணத்தில் 429 ஆண்டுகள் ஐரோப்பியரது ஆதிக்கம் நிலவியதன் அடையாளமாக காணப்படும் நினைவுச் சின்னங்களுள் யாழ்ப்பாணக் கோட்டைக்குத் தனித்துவமான வரலாறு உண்டு.யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கு தெற்கேயுள்ள கடல் நீரேரியுடன் தொடர்பு பட்ட இக் கோட்டை இலங்கையில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோட்டையாக காணப்படுகின்றது.


கி.பி 1619 அளவில் போர்த்துக்கேயரால் முதலில் கட்டப்பட்ட இக் கோட்டை  17 ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ம் நூற்றாண்டிலும் ஆட்சி புரிந்த ஒல்லாந்தரால் மீளக் கட்டப்பட்ட தோற்றத்தினுடனேயே தற்போது காணப்படுகின்றது. அதில் சில மாற்றங்களை பிரித்தானியர் ஏற்படுத்தியிருந்தாலும் அவை ஒல்லாந்தர் கால கோட்டையின் அடிப்படை தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.www.srilankatravelnotes.com இதனால் தான் இக் கோட்டை ஒல்லாந்தர் காலக் கோட்டை என அழைக்கப்படுகின்றது. போர்த்துக்கேயர் நான்கு பக்க சுவர்களை கொண்டதாக அமைத்தனர்.பின் ஒல்லாந்தர் ஐந்து பக்க சுவர் கொண்டதாக மாற்றியமைத்தனர்.இந்த வடிவில் இலங்கையில் அமைக்கப்பட்ட ஒரேயொரு கோட்டை இதுவாகும்.
62 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இக் கோட்டை வெளிப்புறச் சுவர் ஒவ்வொன்றும் கீழ்ப்பகுதி  40 அடி அகலமும், மேற்பகுதி 20 அடி அகலமும் கொண்டமைந்துள்ளது.இந்து சமுத்திர நாடுகளில் உள்ள கோட்டைகளில் கம்பீரமும், அழகும்,சிறந்த தொழில்நுட்ப கலை மரபும் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டை மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் காலக் கோட்டைகள் பற்றி 1984 ல் ஆய்வு மேற்கொண்ட நெல்சன் என்பவர் சமகாலத்துச் சிறந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அமைக்கப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டையை இங்கிலாந்தில் உள்ள தலைசிறந்த கோட்டைகளுடன் ஒப்பிடும் அளவிற்கு சிறந்த வடிவமைப்பைக் கொண்டதெனப் புகழ்ந்து கூறுகின்றார்.
வெளிப்புறச் சுவர்களை சுற்றிஆழமான அகழிகள் காணப்படுகின்றன.நான்கு பக்கமும் பாரிய பீரங்கித் தளங்களையும், பாதுகாப்பு அரண்களையும், காவற் கோபுரங்களையும், சுரங்கங்களையும், சுடகள தளங்களையும், கொண்டதாகவுள்ளன.

       இக் கோட்டையின் உட்பகுதியில் நிர்வாக மையங்களும், படை வீரர்களின் இருப்பிடங்களும், ஒல்லாந்தர் கட்டிய கிறிஸ்தவ தேவாலயமும், யாழ்ப்பாணத்தை நிர்வகித்த ஆளுனர் மாளிகையும் அல்லது இராணி மாளிகையும், சிறைச்சாலைகளும், பிற நிர்வாக கட்டிடங்களும் காணப்படுகின்றன.யாழ்ப்பாண கோட்டை இராணுவ நிர்வாக மையமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறான வரலாற்று தொல்லியல் சார் முக்கியத்துவத்தை கொண்ட மையமாக இது காணப்படுகின்றது.இதனால் தான் யாழ் கோட்டையை பார்வையிடுவதற்காக உள்நாட்டிலிருந்தம் வெளிநாட்டிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்றனர்.வட இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் யாழ்ப்பாண கோட்டையின் மூலமாக ஏற்படுத்தப்படுகின்றது.
        யாழ் கோட்டையின் வரலாற்றினை வெளி உலகிற்கு தெரியப்படுத்தவும் உள்நாட்டு தேசிய வருமானத்தை அதிகரிக்கவும் வட இலங்கையின் தொல்லியல் சுற்றுலாவினை விருத்தியடையச் செய்யவும் பல நிறுவனங்களும் அமைப்புக்களும் செயற்படுகின்றன.ஆகவே தொகுத்து நோக்கும் பொழுது வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாண பண்பாட்டை பழைமையை வெளிப்படுத்தும் யாழ்ப்பாணக் கோட்டையானது வட இலங்கையின் தொல்லியல் மற்றும் கலாசாரம் சார் சுற்றுலாவினை மேம்படுத்துவதற்கு பெரிதும் துணைபுரிகின்றதை இதனூடாக அறிந்து கொள்ள முடிகின்றது.



Reference-
https://ta.m.Wikipedia.org
www.amazingLanka.com
www.archaeology.gov.lk
www.tripadvisor.com
www.srilankatravelnotes.com
www.lonelyplanet.com
https://www.yamu.lk
https://tour.k                    

தொகுப்பு: செ.சுபானி.
யாழ் பல்கலைக்கழகம்.
மூன்றாம் வருட தொல்லியல் துறை.

No comments:

Post a Comment