SrilankanTourism

Saturday, June 24, 2017

தொல்லியற் சுற்றுலா சார் உலக நிறுவனங்கள்.

சுற்றுலா என்ற சொல் கிப்ரு ( kipru) மொழியில் Torah எனும் சொல்லில் இருந்து தோன்றியதாக கூறுகின்றனர். Tornus என்றால் சக்கரம் ஆகும்.எனவே இச் சொல் சுற்றி வருதலைக் குறிக்கின்றது.இவ்வாறு லத்தீன் மொழியில் இருந்து பிறந்த tour என்ற சொல் கி.பி 1292  இல் ஆங்கில மொழியில் கலந்து tourism என்ற பெயரைப் பெற்றது.பின்னர் 20 நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பன்னாட்டளவில் சுற்றுலா வளர்ச்சி பெற ஆரம்பித்தது.இன்றைய காலத்தில் சுற்றுலாத்துறை முழுமையாக அரச அனுசரனையுடன் இடம்பெற்று வருகிறது.இச் சுற்றுலாத்துறை பல வகைகளில் காணப்படுகின்றது. அவையாவன :


உள்நாட்டுச் சுற்றுலா
வெளிநாட்டுச் சுறாறுலா
தனிநபர் சுற்றுலா
குழுச் சுற்றுலா
மரபுரிமைச் சுற்றுலா
தொல்லியல் சுற்றுலா
கலாசாரச் சுற்றுலா
பண்பாட்டுச் சுற்றுலா
ஆன்மீக சுற்றுலா
தொழிற் சுற்றுலா
மருத்துவ சுற்றுலா
பருவகால சுற்றுலா என்பனவாகும்.
      இவ்வகையில் புராதன மனித வாழ்வை ஆராயும் ஒரு அறிவியல் துறையே தொல்லியல் ஆகும்.பண்டைய கால எச்சங்கள் மற்றும் மரபரிமைச் சின்னங்கள் போன்றவற்றை பார்வையாடுவதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுலாவே தொல்லியல் சுற்றுலா எனப்படும்.இத் தொல்லியல் சுற்றுலா மையங்கள் உலக நாடுகள் ஒவ்வொன்றிலும் ஏராளமாக காணப்படுகின்றன.இவ்வாறான தொல்லியற் சுற்றுலா மையங்களை பாதுகாத்து பராமரித்து அபிவிருத்தி அடையச் செய்வதற்காகவே பல தொல்லியற் சுற்றுலா சார் உலக நிறுவனங்கள் செயற்படுகின்றன.அவை பற்றி நோக்குவோம்.

யுனெஸ்கோ.
          1946 november 16 ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் உலக கலாசார, விஞ்ஞான,கல்வி நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கு உருவாக்கப்பட்ட நிறுவனம் இதுவாகும். 193 நாடுகள் இன்று அங்கத்துவ நாடுகளாக காணப்படுகின்றன. whc.unesco.orgஉலக மரபுரிமை சாசனத்திற்கு 911 மையங்கள் கலாசார,இயற்கை மரபுரிமை அம்சங்களாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன. https://ta.m.Wikipedia.org உலகலாவிய ரீதியில் கலாசார தொல்லியல் மையங்களை பாதுகாப்பதற்கான சட்டதிட்டங்கள், சுற்றுலாவினை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பவற்றை சாசனங்களின் ஊடாக வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. 185 நாடுகள் உலக மரபுரிமை சாசனத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக் கொண்டதுடன் 6 வருடங்களுக்கு ஒரு முறை தெரிவு செய்யப்படும் 21 உறுப்பினர்கள் தீர்மானங்களை மேற்கொள்பவர்களாக காணப்படுகின்றன.

 International council of monument and sites  ( ICOMOS )
           உலக மரபுரிமை மையங்களை பாதுகாப்பதற்காக, மீள்புணர் நிர்மானம் செய்வதற்கான ஆலோசனை வழங்கும் அரச சார்பற்ற நிறுவனம் ஆகும்.1965 ம் ஆண்டு வெனிஸ் ஒப்பந்த அடிப்படையில் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.இன்று   9500 உறுப்பினர்கள் ,127 தேசிய அமைப்புக்கள், 28 உலக விஞ்ஞான அமைப்புக்கள் இணைந்த பாரிய நிறுவனம் ஆகும்.www.icomos.org யுனெஸ்கோ உலக மரபுரிமை அமைப்பு (WHC) ஆகியவற்றுக்கான ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் இது செயற்படுகின்றது. அத்துடன் உலக நாடுகளில் இடம் பெறும் புணர்நிர்மான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வளர்முக நாடுகளுக்கு பயிற்சிகளை வழங்குதல் , மரபுரிமை சாசனங்களை திருத்தியமைத்து வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளுடன் உலக மரபுரிமை ஆவண காப்பகத்தையும் நடாத்தி வருகின்றது.

உலக சுற்றுலா அமைப்பு.
United national world tourism  organization (UNWTO )
     
ஐக்கிய நாடுகள் அமைப்பானது சுற்றுலாவிற்கான முக்கிய நிறுவனம் ஆகும்.உலக சுற்றுலாவினை ஒழுங்கமைப்பது இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.சுற்றுலா வளர்ச்சிக்கான அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குதல், ஈடுபாட்டுடன் காணப்படும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு நிலைத்து நிற்கக் கூடிய பொருளாதார கொள்கைகளை கொண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குதல், உறுப்பு நாடுகள் இடையே சுற்றுலா ரீதியான சமூக, பொருளாதார, கலாசார அபிவிருத்திக்கு உதவுதல் மற்றும் சமூக சூழலியல் ரீதியாக ஏற்படும் மறைமுக பாதிப்புக்களில் இருந்து பாதுகாத்து சுற்றுலா மூலமாக வறுமை ஒழித்து நிலைத்து நிற்கும் அபிவிருத்தியினை ஏற்படுத்துதலே இவ் நிறுவனம் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். https://ta.m.Wikipedia.orgஇவ் அமைப்பில் 162 நாடுகள் , 420 தனிப்பட்ட நிறுவனங்கள், மற்றும் கல்வி அமைப்புக்கள் அங்கத்தவர்களாக காணப்படுகின்றனர். மேலும் இவ் நிறுவனம் உலக சுற்றுலா சார் கருத்துக் கணிப்பையும் மேற்கொண்டு வருகின்றது.இவ் வகையில் 2015 ம் ஆண்டு கருத்துக் கணிப்பின்படி  1184 million மக்கள் தொகையினர் உலகளவிலான சுற்றுலாவினை மேற்கொள்கின்றனர்.இது 2010 ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4% வளர்ச்சியாக காணப்படுகின்றது.இதில் ஒரு நாள் தங்கும் பயணிகளாக 50 million உம், ஐரோப்பாவில் 609 million உம், ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளில் 278 million உம்,அமெரிக்காவில் 191 million உம், ஆபிரிக்காவில் 53 million உம், மத்திய கிழக்கு நாடுகளில் 54 million உம் உலக சுற்றுலாப் பயணிகளாக உள்ளனர்.

International Committee On Archaeological Heritage Management.   ( ICAHM )
     1990 ம் ஆண்டு உலக மரபுரிமை மையங்களை முகாமைத்துவம் செய்வதற்காகவும் சுற்றுலா ரீதியாக வளர்ச்சி அடையச் செய்வதற்குமான திட்டங்களை நேரடி, மறைமுகமாக பாதிப்புக்கள் அற்ற வகையில் திட்டமிட்டு பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் இது ஆகும்.

International Council Of Museum.    
 ( ICOM)

         1998 ம் ஆண்டு யுனெஸ்கோ , UNDP, ICOMOS  போன்ற நிறுவனங்களோடு இணைந்த வகையில் தரமான கலாசார சுற்றுலாவினை மக்களுக்கு வழங்குவதற்கு நூதனசாலைகளை பயன்படுத்தும் முறைகளையும், பராமரிப்பினையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனம் இதுவாகும். இதனை விட Internation Center For The Study Of Preservation  And Restoration Of Cultural  Property.( ICCROM), The World Conservation Union  ( IUCN)   போன்ற நிறுவனங்களும் உலக தொல்லியல் சுற்றுலாவில் பல பாரிய பணிகளை ஆற்றிவருகின்றன. https://www.linkedin.com

Reference :

https://en.m.Wikipedia.org
https://en.m.Wikipedia.org>wiki>UNESCO
www.usicomos.org
www.En.UNESCO.org
whc.UNESCO.org
www.unwto.org
www.icomos-UK.org
www.ICCROM.org

தொகுப்பு- செ.சுபானி
மூன்றாம் வருடம் தொல்லியல் துறை
யாழ் பல்கலைக்கழகம்.


No comments:

Post a Comment